மூன்றாம் வகுப்பு படிக்கும், அரசு பள்ளி மாணவி, 289 வினாடிகளில், 150 திருக்குறள் ஒப்புவித்து, உலக சாதனை படைத்து உள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த
காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர், ஆணைக்குட்டி, 30; கூலி தொழிலாளி. இவரது மகள், தர்ஷினி, 8, அப்பகுதியில் உள்ள, ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், மூன்றாம் வகுப்பு படிக்கிறார்.இவருக்கு, திருக்குறள் படிப்பதில் ஆர்வம் இருப்பதை அறிந்த, ஆசிரியர்கள், மாணவியை மேலும் ஊக்கப்படுத்தி, பயிற்சி அளித்தனர். அப்போது, ஐந்து நிமிடங்களில், 150 திருக்குறள் ஒப்புவித்தார்.மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில், கலெக்டர், கந்தசாமி தலைமையில், சமீபத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், மாணவி தர்ஷினி, 289 வினாடிகளில், 150 திருக்குறள் ஒப்புவித்து, சாதனை புரிந்தார்.இதை, சென்னையில் உள்ள, 'டிரம்ப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்' நிறுவனம் அங்கீகரித்தது. இதற்கான சான்றிதழை, கலெக்டர், கந்தசாமி, மாணவி, தர்ஷினி யிடம் வழங்கினார்.மேலும், தர்ஷினி குடும்பத்திற்கு, முதல்வரின் பசுமை வீடுகள் திட்டத்தில், புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை, கலெக்டர் வழங்கினார்.

No comments:
Post a Comment