Sunday, July 21, 2019

அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் மீது ஆய்வுக்குப பின் உரிய ஆணைகள் வெளியிடப்படும்:துணை முதல்வர் அறிவிப்பு

பேரவையில் நேற்று பொதுத்துறை, மாநில சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை,  வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, திட்டம் மற்றும் வளர்ச்சி,
 ஓய்வூதியங்களும் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகள் ஆகிய துறைகளின் மானிய  கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

கொடிநாள் நிதி வசூலில் தொடர்ந்து 15  ஆண்டுகளாக தமிழ்நாடு முதலிடம் வகித்து வருகிறது. மேலும், இந்த வருடம்  முதல், கொடிநாள் நிதிக்கு வருமான வரி விலக்கும் பெறப்பட்டுள்ளது.

பண  பயன்கள் மற்றும் கல்வி உதவி தொகை என 2018-19ம் ஆண்டில் 26.09 கோடி,  முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரை சார்ந்தோர் பயன் பெற்றுள்ளனர்.

அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள்  ஆகியோர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை முன்பணம் ரூ.5000லிருந்து  10,000ஆக உயர்த்தப்படும்.

அரசு ஊழியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளை  களைவதற்காக அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது அறிக்கையை 5.1.2019 அன்று  அரசிடம் அளித்துள்ளது.

ஆய்விற்கு பின் இப்பரிந்துரைகளின் மீது உரிய ஆணைகள்  வெளியிடப்படும்.

ஓய்வூதியதாரர்களுக்கு தற்போது வழங்கப்படும் பண்டிகை  முன்பணம் இனி 4,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.


No comments:

Post a Comment