கல்வி தகவல் மேலாண்மை முகமையில், தொடரும் குளறுபடிகளை, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் சரி செய்வாரா?
என்ற கேள்வி எழுந்துள்ளது.பள்ளி கல்வி துறையில் மாணவர்கள், ஆசிரியர் விபரங்களை ஆன்லைனில் உடனுக்குடன் அறியும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முகமை (எமிஸ்), மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. திட்டம் துவங்கியது முதல், தற்போது வரை பல்வேறு பிரச்னைகளை, 'எமிஸ்' தயாரிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் சந்தித்து வருகின்றனர்.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: கல்வி தகவல் மேலாண்மை முகமை திட்டத்தில், மாணவ, மாணவியர் பள்ளியில் சேரும்போது பிறந்த தேதி, ஆண்டு, மாதம் சரிவர தெரியாது. தோராயமாகவே கூறுவர்.
பிறப்பு சான்றிதழ் மற்றும் ரத்த வகை, ஜாதி, மதம் கேட்கின்றனர். துவக்க பள்ளி மாணவர்களின் பெற்றோரிடம், இத்தகவலை உடனடியாக பெற முடிவதில்லை.பெற்றோர்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. இதனால் சான்றிதழ்களை தர காலதாமதம் செய்கின்றனர். கே.ஜி., வகுப்புகள், ஒன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆதார் எண் இருக்காது.
ஆனால், இவர்களையும் இத்திட்டத்தில் கொண்டு வர வலியுறுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் மாணவர்களின் வருகை, ஆன்லைன், பள்ளி கண்ணாடி, அட்டனென்ஸ் ஆப்பிலும் ஒன்று போல் இருக்க வேண்டும். இதில் பிழை இருந்தால் ஏற்காது. இதேபோல் ஆசிரியர்களின் வருகையை தினமும் பதிய வேண்டும்.
குறித்த நேரத்துக்குள், காலையில் ஆசிரியர்கள் வருகையை பதிவு செய்து விட வேண்டும். ஆசிரியர்கள் அரை நாள் தற்செயல் விடுப்பு எடுக்கும் பட்சத்தில் அட்னன்ஸ் ஆப்பில் பதிவு செய்ய இயலுவது இல்லை.நாள் முழுவதும் விடுப்பாக காட்ட வேண்டும் அல்லது பணி செய்ததாக காட்ட வேண்டும். இதனால் அரை நாள் தற்செயல் விடுப்பு எடுக்க முடியாத சூழல் உருவாகிறது. இத்திட்டத்தால் அரசு பள்ளிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது.
அதுபோல் சர்வர் பிரச்னை அதிகம் உள்ளது. பள்ளி நிர்வாகம், வகுப்பு எடுப்பது மட்டுமின்றி இத்திட்ட பணிகளை பிழையின்றி தினமும் நாள் முழுவதும் செய்ய வேண்டிய நிலை, ஆசிரியர் அல்லது தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்படுகிறது. இத்திட்டத்தில் பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்களை நியமித்தால் பணிச்சுமை குறையும். இவ்வாறு அவர்கள் கூறினர். இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆராய, பள்ளி கல்வி துறை இணை இயக்குனர் ஸ்ரீதேவி, ஈரோடு மாவட்டத்துக்கு, இன்று வருகிறார். இத்திட்டத்தில் உள்ள நடைமுறை குளறுபடிகளை நீக்க நடவடிக்கை எடுப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது.

No comments:
Post a Comment