தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு விவகாரம் தொடர்பான சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம்
வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண்: 25-இல், ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதும் அனைத்து வகையான இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அத்துடன், அரசாணை 71-ல் வெயிட்டேஜ் முறையும் பணி நியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது, அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; மேலும், வெயிட்டேஜ் முறை
பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கூறினர்.
இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்திலும், அதன் மதுரை கிளையிலும் தனித்தனியாக வழக்குகள் தொடுக்கப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் நடத்திய விசாரணையில், தமிழக அரசின் அரசாணை செல்லும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஆனால், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையோ, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி, அரசாணைக்கு தடை விதித்தது.
ஒரே நீதிமன்றத்தின் இரண்டு அமர்வுகள் வெவ்வேறு விதமான தீர்ப்பை வழங்கியதால், வழக்கு உச்சநீதிமன்றம் சென்றது. அனைத்து பிரிவினருக்கும் வழங்கப்பட்ட 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில், தமிழக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் என்று தெரிவித்தது.
இந்த தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017, டிசம்பர் 5-ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், இது தொடர்பான சீராய்வு மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

No comments:
Post a Comment