கரூரில், அரசு முடிவை தவறாக பயன்படுத்தி, பள்ளிகளை திட்டமிட்டு மூடி வருவதாக, ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கரூர்
மாவட்டத்தில், எட்டு ஒன்றியங்களில், 677 அரசு துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. அவற்றில், 50 ஆயிரத்து, 306 மாணவ, மாணவியர் கல்வி படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருவதால், ஒரு மாணவர் கூட சேர்க்கப்படாத பள்ளிகளை மூட, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி தமிழகத்தில், 48 பள்ளிகளை மூட, அரசு முடிவு செய்துள்ளது. அதில், கரூர் மாவட்டத்தில், மூன்று பள்ளிகள் அடங்கும். இந்நிலையில், குக்கிராமத்தில் இருந்து, தங்கள் ஊருக்கு அருகில் இடமாற்றம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், மாணவர் சேர்க்கைக்கு பள்ளி ஆசிரியர்களே முட்டுக்கட்டை போடுவதாக புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து, கரூர் மாவட்ட கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் கொள்கை முடிவால், கடந்த ஐந்து ஆண்டுகளில், மாவட்டத்தில் ஒரு பள்ளி கூட மூடப்படவில்லை.
அதிகாரிகளின் நடவடிக்கைக்கு பயந்து, ஆசிரியர்கள் அலைந்து திரிந்து பள்ளிகளில் மாணவர்களை சேர்த்து வந்தனர். தங்கள் சொந்த செலவில், வாகன ஏற்பாடு உட்பட பல்வேறு வசதிகளை செய்து மாணவர்களை ஈர்த்தனர். இந்நிலையில், நடப்பு ஆண்டில் பூஜ்ஜியம் மாணவர் எண்ணிக்கை உள்ள பள்ளிகளை மூட அரசு முடிவு செய்துள்ளது. அதில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இதன் விளைவாக, தங்கள் சொந்த ஊருக்கு அருகே உள்ள பள்ளிகளுக்கு சென்று விடலாம் என்ற நோக்கில், மாணவர் சேர்க்கைக்கு ஆசிரியர்களே தடை போடத் துவங்கியுள்ளனர்.கரூர் ஊராட்சி ஒன்றியம், ஓலப்பாளையம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியம், மட்டபாறைபுதூர், க.பரமத்தி ஒன்றியம் பேரக்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டுவந்த துவக்கப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஓலப்பாளையம் பள்ளியில், ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வந்தபோது, அங்கு பணிபுரியும் ஆசிரியர் விடுமுறை எடுத்து சென்றுவிட்டார். பேரக்கம்பாளையம் பள்ளியில் இரண்டு மாணவர்கள் படித்து வந்தனர். அதன் தலைமையாசிரியர், டி.சி., கொடுத்து அவர்களை அனுப்பிவிட்டார்.
மாணவர் சேர்க்கைக்கு வழியில்லாத பள்ளிகளை மட்டுமே மூட அரசு முடிவு எடுத்துள்ளது. ஆனால், குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள், தங்கள் பணியிட மாறுதலுக்கு அரசின் முடிவை தவறாக பயன்படுத்த துவங்கியுள்ளனர். பள்ளியை மூடுவது எளிது. ஆனால் திறப்பது மிகவும் கடினம்.
இவ்வாறு அவர் கூறினார்.இது குறித்து, கரூர் மாவட்ட கல்வி அலுவலர் சிவராமன் கூறுகையில், "மாவட்டத்தில், மூன்று பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால், வேறு பள்ளிகளுக்கு ஆசிரியர்களுக்கு மாற்று பணி அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இந்த மாதம் இறுதி வரை நடக்கும். அதன்பின், பள்ளிகளை மூடுவது குறித்து முடிவெடுக்கப்படும். பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மறுத்த ஆசிரியர்கள் குறித்து, விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.

No comments:
Post a Comment