மத்திய அரசு பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர, மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, நேற்று நாடு முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட
மையங்களில் நடந்தது; ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள், எளிதாக இருந்ததாக, தேர்வர்கள் கூறியுள்ளனர். இதேபோல், பிளஸ் 2 மாணவர்கள், 'ஆர்கிடெக்ட்' எனும் கட்டட வடிவமைப்பு கலை படிப்பில் சேர்வதற்கான, 'நாட்டா' தேசிய நுழைவு தேர்வின், இரண்டாம் கட்டம், நேற்று நடந்தது. கணினி வழியில், தேர்வுகள் நடத்தப்பட்டன; நேற்று மாலை, இணையதளத்தில் விடை குறிப்பும் வெளியிடப்பட்டது. இதன் முடிவுகள், வரும், 21ல் வெளியாகின்றன.
No comments:
Post a Comment