Wednesday, August 21, 2019

வட்டார விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாரடைப்பால் மரணம்

வட்டார விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை அழைத்துச் சென்ற உடற்கல்வி ஆசிரியர், மாரடைப்பால், விளையாட்டு
மைதானத்திலேயே இறந்தார்.திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே, அரசங்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், வட்டார அளவிலான, குழு விளையாட்டு போட்டிகள், இரண்டு நாட்களாக நடந்து வருகின்றன.திருவெறும்பூர் அருகே உள்ள, தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் உடற்பயிற்சி ஆசிரியர் அருண், 32; திருமணம் ஆகவில்லை. இவர், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக, மாணவர்களை அழைத்துச் சென்றிருந்தார்.நேற்று, மைதானத்தில் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, அருணுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, மைதானத்திலேயே உயிரிழந்தார்.

No comments:

Post a Comment