Friday, August 30, 2019

வருமான வரி கணக்கு தாக்கல் நாளை கடைசி

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளை முடிகிறது.கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் துவங்கியது.
ஆண்டுக்கு, 2.5 லட்சம் ரூபாய் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வருவாய் இருந்தாலும், கணக்கு தாக்கல் செய்வது, கடந்த ஆண்டு முதல் கட்டாயமாகியுள்ளது. இதற்கான அவகாசம், நாளை நிறைவடைகிறது. செப்., 1க்கு பின், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், அபராதம் செலுத்த வேண்டும்.வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோர், இன்று மற்றும் நாளைக்குள் தாக்கல் செய்யுமாறு, அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment