அசாம் மாநிலத்தில், அங்கன்வாடி மையங்களில், 19.96 லட்சம் பினாமி பயனாளியர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, நீக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது.
நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில், பினாமி பயனாளியரை நீக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, தகவல் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் கேட்கப்பட்டிருந்தது. இதற்கு, அமைச்சகம்அளித்துள்ள பதிலில்கூறியிருப்பதாவது:ஊட்டச்சத்து குறைவாக உள்ள, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலுாட்டும் பெண்களுக்கு, ஊட்டச்சத்து வழங்கும் நோக்கில், நாடு முழுதும், 14 லட்சத்துக்கும் அதிகமான அங்கன்வாடி மையங்கள் நடத்தப்படுகின்றன. இதில், 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன்பெறுகின்றனர். இவர்களில் பலர், பினாமி பெயர்களில் பயன் அடைவதாகபுகார்கள் வந்தன. இதையடுத்து, அங்கன்வாடி மையங்களில்பயணியரை ஆய்வு செய்யுமாறு, மாநில அரசுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில், அசாம் அரசு மட்டுமே அறிக்கை அனுப்பியுள்ளது. அதில், 'ஆதார் எண்ணை வைத்து, பயனாளியர் அடையாளம் காணப்பட்டனர்; 19.96 லட்சம் பினாமி பயனாளியர் நீக்கப்பட்டனர்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலிருந்து அறிக்கையை எதிர்பார்த்துள்ளோம்.இவ்வாறு, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment