''ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டத்திற்கு, பொது மக்களிடம் வரவேற்பு உள்ளது. இந்த ஆண்டு, பொதுத்தேர்வு நடந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் தான்,
முழுமையாக அமல்படுத்தப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார்.
சென்னை, மயிலாப்பூரில் உள்ள, தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று ஆசிரியர் தின விழா நடந்தது. அதில், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயகுமார் பங்கேற்றனர். விழாவில், அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: பள்ளி மாணவ - மாணவியருக்கு,
இலவச, 'லேப் டாப்' வழங்குவது போல, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், இலவச லேப் டாப் வழங்கப்படும். மேலும், 20 லட்சம் மாணவர்களுக்கு, கையடக்க கணினி வழங்கப்படும். இம்மாத இறுதிக்குள், அனைத்து பள்ளிகளிலும், இணையதள வசதி செய்யப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:இந்தியா முழுவதும், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வு நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் திறனை மேம்படுத்தவும், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே, கற்றல் மற்றும் கற்பித்தல் அளவை மேம்படுத்தவும், இது நடைமுறைக்கு வருகிறது.தமிழகத்தில், மூன்று ஆண்டுகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுஉள்ளது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், இந்த ஆண்டு, பொதுத் தேர்வு எழுத வேண்டும். தேர்வு முடிவு, மூன்று ஆண்டுகளுக்கு பிறகே வெளியிடப்படும். படிப்படியாக, மாணவர்கள் கல்வித் திறனை மேம்படுத்துவதற்காக, மூன்று ஆண்டுகள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளுக்கு பின், முழுமையாக அமல்படுத்தப்படும். இத்திட்டம், பொது மக்கள் மற்றும் பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.தேர்வு கட்டணம் இல்லை. பத்தாம் வகுப்பில், தமிழ் தேர்வு, ஒரே தாளாக இருக்கும். கடந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில் அறிமுகப்படுத்தினோம். இரு மொழி கொள்கையில், தமிழக அரசு உறுதியாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment