சேலம் மாவட்டத்தில் உள்ள, உமையாள்புரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்களுடன் இணைந்து, கழிவு பொருட்கள் மேலாண்மை, நீர் சிக்கன முறையை கையாண்டு அசத்துகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, உமையாள்புரம் அரசு துவக்கப் பள்ளியில், 30க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.விதை பந்துகள்பள்ளி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில், மரம் வளர்ப்பு, விதை பந்து தயாரித்தல், மூலிகை செடிகள் நடவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் இணைந்து, ஈடுபட்டு வருகின்றனர். தண்ணீர் பற்றாக்குறை உள்ள சூழலில், நீரை சிக்கனமாக பயன்படுத்தி, விவசாய சாகுபடியை இப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
வகுப்பறை வளாகத்தில் சேகரமாகும் காகிதங்களை வீணாக்காமல், தேச தலைவர்கள், கார்ட்டூன் பொம்மைகள் உருவாக்கி, மாணவர்களுக்கு, மறு சுழற்சியை பயனுள்ள வகையில் கற்றுத் தருகின்றனர். இந்த செயல் திட்டத்திற்காக, 2018ல், மாணவர் இருவர், 'வளரும் கலாம், இளம் கலாம் - 2018' என்ற இரு விருதுகளை பெற்றனர்.தற்போது, குப்பையில் வீசப்படும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை ஆசிரியர்கள், மாணவர்கள் சேகரித்து, பள்ளியை சுற்றி யுள்ள மரங்களில் கட்டி வைத்துள்ளனர். அதில், பறவைகளுக்கு தண்ணீர், உணவு நிரப்பி வைக்கின்றனர்.'மறுசுழற்சி பிளாஸ்டிக் மூலம் பறவைகளை பாதுகாப்போம்' என பெயரிட்டு, இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளனர்.
மாணவர்களது செயலை கண்ட கிராம மக்கள், தங்களது வீடுகளில் உள்ள மரங்களிலும், பறவைகளுக்கு தண்ணீர், உணவு வைத்து வருகின்றனர். பறவைகளுக்கு பயன்பள்ளி ஆசிரியர் சீனிவாசன் கூறியதாவது: பயன்படுத்திய பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரித்து, பறவைகளுக்கு உணவு, தண்ணீர் வைக்கும் திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். பழைய குடிநீர் பாட்டில்களை வீதிகளில் வீசாமல், பறவைகளுக்கு பயன்படுத்தியதால், கிளி, புறா, மைனா, குயில் உள்ளிட்ட பறவைகள் அதிகளவில் பயன்பெறுகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment