Saturday, September 14, 2019

அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி தனியாருடன் இணைந்து துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, தனியாருடன் இணைந்து, அமைச்சர், செங்கோட்டையன்
துவக்கி வைத்தார் . பள்ளிக்கல்வித் துறை, சத்யசாய் அன்னபூர்ணா அறக்கட்டளை இணைந்து, அரசு பள்ளி மாணவ - மாணவியருக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம், நேற்று துவங்கப்பட்டது. இதற்கான விழா, ஈரோடு மாவட்டம், கோபி, கரட்டடிபாளையம், பஞ்., யூனியன் துவக்கப் பள்ளியில் நேற்று நடந்தது. இதில், 92 குழந்தைகளுக்கு சிற்றுண்டி வழங்கி, பள்ளிக்கல்வி துறை அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது:தனியார் பள்ளிகள் போலவே, அரசு பள்ளி குழந்தைகளுக்கு, அடுத்தாண்டு, 'ஷூ, சாக்ஸ் 'வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில், குழந்தைகள் எண்ணிக்கை அடிப்படையில், ஆய்வு செய்தபோது, 17 சதவீத மாணவர்களுக்கு, சத்து குறைவாக உள்ளது தெரிந்தது.சத்தான உணவு வழங்க, அறக்கட்டளை மூலம், இத்திட்டத்தை உருவாக்கியுள்ளோம்


காலை சிற்றுண்டி வழங்குவதை, மாதிரி திட்டமாக, கோபியில் துவக்கியுள்ளோம். நாளொன்றுக்கு, தலா ஒரு வகை சாதம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment