Monday, September 16, 2019

கல்வித் துறையில் நிர்வாக அதிகாரி இடம் காலி; கல்வி பணிகள் பாதிப்பு?

நிர்வாக சீரமைப்பு காரணமாக, 52 மாவட்ட கல்வி அலுவலகங்களிலும், ஊழியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், பள்ளிக் கல்வி பணிகள் முடங்கி உள்ளன. காலி பணியிடங்களை உடனே நிரப்ப, நிர்வாக அலுவலர் சங்கம் கோரிக்கைவிடுத்துள்ளது.

கூடுதல் பணி சுமைபள்ளிக் கல்வித் துறை நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம், சங்க தலைவர் சீனிவாசன் தலைமையில், சென்னையில் நடந்தது. அதில், பள்ளிக் கல்வி பணிகள் முடங்கி உள்ளது குறித்து, விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:நிர்வாக சீரமைப்பின் காரணமாக, 68 கல்வி மாவட்டங்கள் தற்போது, 120 கல்வி மாவட்டங்களாக அதிகரித்துள்ளன. அதேபோல, பள்ளிக் கல்வி தலைமை அலுவலகத்தில் உள்ள, இணை இயக்குனர்களின் பணிகளில் சிலவற்றை பிரித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு வழங்கி உள்ளனர். அதனால், பள்ளிக் கல்வியின் மாவட்ட அலுவலகங்களுக்கு, கூடுதல் பணி சுமை ஏற்பட்டுள்ளது. இதற்கு, போதிய அலுவலர்கள் நியமிக்கப்படவில்லை.

நேர்முக உதவியாளர், சட்ட அலுவலர், நிர்வாக அலுவலர் போன்ற பணியிடங்கள் காலியாக உள்ளன.மேலும், பள்ளிக் கல்வித் துறையில், ஏராளமான நீதிமன்ற வழக்குகளை, தினமும் கையாள வேண்டியுள்ளது. இதற்கு, மாவட்ட அலுவலகங்களில், உரிய சட்ட அலுவலர் இல்லாமல், ஆவணங்கள் தயாரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. மந்த நிலை மாறும்எனவே, மாவட்ட அலுவலகங்களுக்கு நிர்வாக அலுவலரும், மண்டல அளவில் சட்ட அலுவலரும்நியமிக்கப்பட வேண்டும்.உதவியாளர் பணியிடங்களை, பதவி உயர்வின் வழியாக நிரப்ப வேண்டும். இந்த பணிகளை மேற்கொண்டால், வழக்கு களை முடிப்பது மற்றும் நிர்வாக பணிகளில் உள்ள மந்த நிலை மாறும்.இவ்வாறு, தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment