கல்வித்துறை அதிகாரிகள் குளறுபடியால், 'நிஷ்டா' பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்கள் சிரமப்படுகின்றனர்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட பணியிடை பயிற்சி முகாம் (நிஷ்டா), கல்வி மாவட்ட அளவிலும், வட்டார அளவிலும் நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தில், கடந்த, 14ல் துவங்கிய பயிற்சி, நவ., 20 வரை, ஐந்து கட்டமாக நடக்க உள்ளது. இரண்டு கட்ட பயிற்சி முகாம் நிறை வடைந்த நிலையில், மூன்றாம் கட்ட முகாம், 29 முதல் நடக்க உள்ளது. பவானி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு, சத்தி கல்வி மாவட்ட மையத்தில், பயிற்சி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆசிரியர்கள், 100 கி.மீ., தூரம் பயணிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கிலோ மீட்டர் அதிகம் என்பதுடன், பயண நேரம் அதிகம் என்பதால், குக்கிராமங்கள், பிற மாவட்ட பகுதியில் இருந்து வரும் ஆசிரியர்கள் சிரமப்படுவதுடன், உரிய நேரத்தில் பயிற்சிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசித்து, உரிய நடவடிக்கை எடுக்க எதிர்பார்க்கின்றனர்.

No comments:
Post a Comment