Wednesday, October 16, 2019

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு யோகா பயிற்சி

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, மனவளம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, பாட வாரியாக வகுப்பு எடுப்பதற்காக, பேராசிரியர்கள் வழியே, அவ்வப்போது பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல, ஆசிரியர்களுக்கு, புத்துணர்வு வகுப்புகளும், மாவட்ட வாரியாக நடத்தப் படுகின்றன.இந்நிலையில், அரசு பள்ளிகளில், மாணவர்களின் உடல் நலன், ஆரோக்கியம், விளையாட்டு மேம்பாட்டுக்காக உழைக்கும், உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், புத்துணர்வு பயிற்சி வழங்க, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

மாவட்ட வாரியாக, மனவள கலை மேம்பாடு மற்றும் யோகா பயிற்சிகள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு, மூன்று நாட்கள் வழங்கப்பட உள்ளன. சென்னையில், இன்று முதல் மூன்று நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது. கல்வி மாவட்டத்துக்கு, தலா ஒரு மையம் என, மொத்தம் ஐந்து மையங்களில், இந்த பயிற்சி தரப்படுகிறது.

No comments:

Post a Comment