Tuesday, December 31, 2019

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜன.4 ல் திறக்கப்படும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஜனவரி, 4ல் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளி மாணவ - மாணவியர், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறையில் உள்ளனர். 'ஜன., 2ல் பள்ளிகள் திறக்கப்படும்' என அறிவிக்கப் பட்டிருந்தது. அன்றைய தினம், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளதால், பள்ளி திறப்பு, ஜன., 3க்கு ஒத்தி வைக்கப்பட்டது.ஊரக உள்ளாட்சி தேர்தல், ஓட்டு எண்ணிக்கை, சில இடங்களில், 3ம் தேதி வரை நீடிக்க வாய்ப்புள்ளதால், பள்ளி திறப்பை ஒத்தி வைக்க வேண்டும் என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தின.

அதை ஏற்று, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், அரையாண்டு விடுமுறைகள் முடிந்து, ஜன., 4ல் திறக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் நேற்று அறிவித்தார்.

No comments:

Post a Comment