'நீட்' தேர்வுக்கான ஆன்லைன் பதிவுக்கு, ஜன., 6 வரை விண்ணப்பிக்கலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் மற்றும் அறிவியல் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளில் சேரவும், நீட் தேர்வில் தேர்ச்சி கட்டாயம். நடப்பு கல்வி ஆண்டில், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர, மே 3ல் நீட் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள், 2019, டிச., 2 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என, தேசிய தேர்வு முகமையான, என்.டி.ஏ., அறிவித்தது.
இந்த பதிவுக்கான அவகாசம், டிச., 31ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஜன., 6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள், வரும், 6ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். தேர்வு கட்டணத்தை, 7ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என, என்.டி.ஏ., அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment