அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 1,706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பட்டதாரி
ஆசிரியர்களுக்கான பணியாளர் நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டதில் பாட வாரியாக ஆசிரியர்களின்றி உபரி என கண்டறியப்பட்ட இடங்களை பொது தொகுப்புக்கு ஒப்படைக்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டது. அனைத்து அரசு மற்றும் நகராட்சி பள்ளிகளிலும் இதற்கான பட்டியலை பெற்று இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டது.அதன்படி பெறப்பட்ட உபரி பணியிடங்களை வருங்காலங்களில் காலியிடங்களாகவோ அனுமதிக்கப்பட்ட பணியிடங்களாகவோ கருதக்கூடாது.சரண்டர் செய்யப்பட்ட இடங்களை பள்ளிகளின் பதிவேடுகளில் பொது தொகுப்புக்கு சரண்டர் செய்யப்பட்டது என குறிப்பிட வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின்படி மொத்தம் 1706 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழ் 308, ஆங்கிலம் 144, கணிதம் 289, அறிவியல் 457, சமூக அறிவியல் 371 மற்றும் பிற இடங்கள் 137 என ஆசிரியர் பணியிடங்கள் ரத்தாக உள்ளன. இந்த இடங்கள் தேவைப்படக்கூடிய பள்ளிகளுக்கு தேவையான பாடங்களுக்கு மாற்றப்பட உள்ளன.

No comments:
Post a Comment