Wednesday, January 8, 2020

முதல் திருப்புதல் தேர்வு பிளஸ்-2, பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் லீக்

தமிழகத்தில் 9ம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு
வினாத்தாள்கள் தேர்வுக்கு முன்பே சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. குறிப்பிட்ட ஆப்களில் மட்டுமே வினாத்தாள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கோவை உள்பட மாநிலம் முழுவதும் முதல் திருப்புதல் தேர்வு பிளஸ்-2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று துவங்கியது. பொதுத்தேர்வு முறையில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.

தேர்வுகள் வரும் 14ம் தேதி வரை நடக்கிறது.

இதில், பிளஸ்-2 கணித பாடத்திற்கான தேர்வு வரும் 13ம் தேதி நடக்கவுள்ளது. அந்த கணித தேர்வுக்கான வினாத்தாள் நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இதேபோல், 10ம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுக்கான அறிவியல் மற்றும் கணித வினாத்தாள்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கிறது. தேர்வுகள் நடப்பதற்கு முன்பு தொடர்ந்து வினாத்தாள்கள் வெளியாகி வருவதால் கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment