Thursday, February 20, 2020

10ம் வகுப்பு மாணவர் விபரம் நாளை முதல் திருத்தம்

பத்தாம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களின் விபரங்களில் உள்ள பிழைகளை, நாளை முதல் திருத்தம் செய்யலாம் என, அரசு தேர்வு துறை தெரிவித்துள்ளது.

அரசு தேர்வு துறை இணை இயக்குனர் அமுதவல்லி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
'பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான மாணவர்களின் பெயர் பட்டியலை, பிப்., 17 முதல் தேர்வு துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதில், மாணவர் பெயர் விடுபட்டிருந்தால், தேர்வு துறை அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும்.
பெயர் பட்டியலில் திருத்தங்கள் இருந்தால், அதன் விபரங்களை, இன்றைக்குள் மாவட்ட கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட கல்வி அலுவலர்கள், நாளை முதல், 24ம் தேதி வரை, பெயர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment