Saturday, February 22, 2020

மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்க அவகாசம்

 மத்திய அரசின் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம், மார்ச், 2 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி ஆசிரியர் பணியில் சேர, பட்டதாரிகள், பி.எட்., படிப்புடன், 'டெட்' என்ற,
மாநில அளவிலான ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். தமிழக பள்ளி கல்வி பாட திட்ட பள்ளிகளில், டெட் தேர்ச்சி பெற்றவர்கள், ஆசிரியராக பணி அமர்த்தப்படுவர். மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் போன்றவற்றில், ஆசிரியராக பணியாற்ற, மத்திய அரசின், டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

இந்த ஆண்டுக்கான மத்திய டெட் தேர்வு, ஜூலை, 5ல் தேசிய அளவில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, ஜன., 24ல் துவங்கியது. வரும், 24ம் தேதி பதிவுக்கான அவகாசம் முடிவதாக இருந்தது. ஆனால்,விண்ணப்ப பதிவுக்கான அவகாசத்தை, மார்ச், 2 வரை நீட்டித்து, தேர்வை நடத்தும், சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment