Thursday, March 12, 2020

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள்: 9 தமிழக மாணவர்களுக்கு இடம்



இஸ்ரோவின் சார்பில் 'யுவிகா' என்ற பெயரில் இளம் விஞ்ஞானிகள் திட்டம் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாநிலம், யூனியன் பிரதேசங்களிலிருந்து தலா மூன்று பேர் வீதம் தேர்வு செய்யப்படவுள்ளனர். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கென ஐந்து இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. தற்காலிக தேர்வு பட்டியல் இஸ்ரோவின் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது. தேசிய அளவில் 368 பேரில் தமிழகத்தை சேர்ந்த 9 மாணவர்கள் இடம் பெற்றுள்ளனர். தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் எட்டாம் வகுப்பு மதிப்பெண், மற்ற சான்றிதழ்களை பி.டி.எப்., பைலாக மார்ச் 16 மாலை 5:00 மணியிலிருந்து www.isro.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க மார்ச் 26 கடைசி நாள்.

No comments:

Post a Comment