டி.என்.பி.எஸ்.சி., தேர்வு முறைகேடு காரணமாக, பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வில், வினாத்தாள், விடைத்தாள் வாகனங்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக பள்ளி கல்வி பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நாளை
துவங்குகிறது. இதைத் தொடர்ந்து, பிளஸ் 1, 10ம் வகுப்புகளுக்கான தேர்வுகளும் துவங்க உள்ளன. இந்த தேர்வுகளை, சுமூகமாக, அமைதியாக நடத்தி முடிக்கும் வகையில், விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும், 3,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன; 41 ஆயிரம் ஆசிரியர்கள் தேர்வு கண்காணிப்பாளர்களாக, பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர். 20 ஆயிரம் ஆசிரியர்கள் அடங்கிய, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர, 10 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள், வினாத்தாள், விடைத்தாள் எடுத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தேர்வுக்கான வினாத்தாள்களை தேர்வு கட்டுப்பாட்டு அறை, தேர்வு அறைகளுக்கு எடுத்து செல்லும்போதும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி செயலர் தீரஜ்குமார் ஆலோசனை வழங்கி உள்ளார்.வினாத்தாள் மற்றும் விடைத்தாள் எடுத்து செல்லும் வாகனங்களை, போலீசார் பாதுகாப்புடன் இயக்க வேண்டும். தினமும் ஒரே நபர்களே, ஒரே வழி தடத்தில் பணியாற்றக் கூடாது. வாகனங்களை வழியில் நிறுத்தாமல், தேர்வு கட்டுப்பாட்டு அறைகளில் இருந்து, தேர்வறைகளுக்கு நேரடியாக வினாத்தாள் மற்றும் முதன்மை விடைத்தாள்களை எடுத்து செல்ல வேண்டும் என, புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில், வாகனங்களில் விடைத்தாளை எடுத்து செல்லும் போது தான், மிகப்பெரிய குளறுபடி நடந்து, தற்போது சி.பி.சி.ஐ.டி., போலீசாரால், பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு குளறுபடியை ஒரு பாடமாக எடுத்து கொண்டு, அதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல், முழுமையான பாதுகாப்புடன் தேர்வை நடத்த வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள், கண்காணிப்பு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

No comments:
Post a Comment