Friday, June 5, 2020

24 பள்ளிகளில் பணியாற்றியதாக ரூ.1 கோடி சுருட்டிய ஆசிரியை

லக்னோ: உ.பி.யில் அரசு பள்ளி ஆசிரியை 24 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி 13 மாதங்களில் ரூ. 1 கோடியை சம்பளமாக வாரி சுருட்டிய சம்பவம் நடந்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அனாமிகா சுக்லா, அரசு பள்ளி அறிவியல் ஆசிரியையான இவர் அங்குள்ள கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா பள்ளியில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மாநில அரசின் கல்வித்துறையின் கீழ் அம்பேத்கார் நகர், அலிகார், பிரயாக்ராஜ் உள்ளிட்ட 24 இடங்களில் இயங்கும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலா பள்ளிகளில் அனாமிகா சுக்லா பணியாற்றியதாக கடந்த 13 மாதங்களில் ரூ. 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்தது.


இது குறித்து நடந்த விசாரணையில், கஸ்தூர்பா காந்தி பலிகா வித்யாலயா பெயரில் உள்ள அனைத்து பள்ளிகளிலும், இவர் பணியாற்றி வருவதாக பதிவேடுகளில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநில துவக்கக் கல்வித் துறையின் கூடுதல் இயக்குநர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். முறைகேடு அம்பலமானதையடுத்து ஆசிரியை தலைமறைவாகிவிட்டார்.

பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கூறுகையில், ஆசிரியை அனாமிகா சுக்லாவிற்கு ரூ.1 கோடி அளவுக்கு ஊதியம் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை எதுவும் இல்லை. இதுவரை இந்த தகவல் எந்த வகையிலும் உறுதி செய்யப்படவில்லை என்றார்,

No comments:

Post a Comment