Sunday, September 9, 2018

கிருஷ்ணகிரி அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட்!; ஆசிரியர் மீதான நடவடிக்கையை எதிர்த்து மாணவர்கள் 'நீல் டவுன்' போராட்டம்

கிருஷ்ணகிரி அருகே அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியரை முதன்மைக் கல்விஅலுவலர் எந்தவித விசாரணையுமின்றி சஸ்பெண்ட் செய்துள்ள சம்பவம்
சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதுகிருஷ்ணகிரி மாவட்டம் கும்மனூரில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறதுஇந்தப் பள்ளியில் கணித பாட ஆசிரியராக பணியாற்றி வருபவர்ஜெயபிரகாஷ் (55). கடந்த 5 ஆண்டுகளாக இப்பள்ளியில் பணியாற்றிவருகிறார்இந்நிலையில்கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி,திடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷை இன்று சஸ்பெண்ட் செய்துஉத்தரவிட்டுள்ளார்அந்த உத்தரவில்பெற்றோர் ஆசிரியர் கழகம்,மாணவர்கள்ஊர்மக்கள் அளித்த புகாரின்பேரில் இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால்புகார் மனுக்களின் உள்விவகாரங்கள் குறித்து விரிவான விளக்கம்சொல்லப்படவில்லைமேலும்புகார்கள் தொடர்பாக அவரிடம் துறை ரீதியானவிசாரணை நடத்தப்படவில்லைவிளக்கம் கேட்டு குற்றச்சாட்டுகுறிப்பாணைகளும் வழங்கப்படவில்லைவழக்கமான சம்பிரதாயமானநடவடிக்கைகளை தவிர்த்துவிட்டுதிடீரென்று ஆசிரியர் ஜெயபிரகாஷைசஸ்பெண்ட் செய்துள்ளதற்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்திஎழுந்துள்ளது.

இதற்கிடையேஆசிரியர் ஜெயபிரகாஷ் மீதான நடவடிக்கையை எதிர்த்தும்,அவரை மீண்டும் பள்ளியில் சேர்க்கக் கோரியும் பள்ளி மாணவமாணவிகள்முட்டிக்காலிட்டு நூதன முறையில் போராட்டம் நடத்தினர்இதுகுறித்துகாவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments:

Post a Comment