Saturday, October 13, 2018

டேக்வாண்டோவில் சாதனை: 6ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி

 பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர்  ராஜமாணிக்கம்(16).  கடந்த ஆண்டு மாநில அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டியில் 40 முதல் 42 கிலோ
எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த ஆண்டே இதேபிரிவுகளில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுபோன்று மாநில, மண்டல, மாவட்டஅளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.

நடப்பு 2ம் பருவத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால், வழங்கப்பட்டுள்ள 6ம்வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதனையாளர்களுக்கான பக்கத்தில் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதிற்குட்பட்ட 40-42கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள ராஜமாணிக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தான்படிக்கும் காலத்தில் தன்னோடு படிக்கும் மாணவ, மாணவிகள் தன்னைப்பற்றியும் பாடம் படிப்பது மாணவி ராஜமாணிக்கத்திற்கும், அந்த பள்ளிக்கும், ராஜமாணிக்கத்தின் பெற்றோருக்கும் பெருமையாக அமைந்துள்ளது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மாணவி ராஜமாணிக்கத்திற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விவசாய குடும்பம்:
மதுரை மாவட்டம், பேரையூர் தாலுகா, மேலதிருமாணிக்கம் ஊரைச்சேர்ந்த விவசாயியான சுப்பையா, சந்தனம் தம்பதியினருக்கு 3வது மகளாகப்பிறந்தவர் ராஜ மாணிக்கம். திருமாணிக்கம்என்ற ஊர்ப்பெயரையே இவரது அப்பா ராஜமாணிக்கம் என பெயரிடப் பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டுவிடுதியில் சேர்ந்து, பெரம் பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்துவருகிறார். இவருக்கு அருந்தேவி, பிரியாஆகிய 2 அக்காக்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment