ஒடிசா மாநிலத்தில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்
தமைமையிலான, பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சி நடக்கிறது.இங்கு, கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, சோதனை அடிப்படையில், ஸ்மார்ட் போன்கள் மூலம், ஆன்லைன் வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து, கஞ்ஜம் கலெக்டர், விஜய் அம்ருதா குலங்கே கூறியதாவது:பெரும்பாலான வீடுகளில், ஸ்மார்ட் போனை பயன்படுத்துகின்றனர். எனவே, மாணவர்களின் படிப்புக்கு உதவும் வகையில், அதை மாற்ற திட்டமிட்டோம்.மாணவர்கள் பள்ளிக்கு வராத நேரங்களில்நடத்தப்படும் பாடங்கள் குறித்து தெரிந்து கொள்வதற்கு, இந்த ஆன்லைன் பாடத்திட்டம் உதவும். இந்த முயற்சி வெற்றி பெற்றால், படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments:
Post a Comment