Sunday, December 2, 2018

முதுநிலை ஆசிரியர் பணியிடம் நிரப்ப திட்டம்

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் இடங்களுக்கான, பதவி உயர்வு நடவடிக்கையை, இந்த வாரத்தில் துவக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

நடப்பு கல்வி ஆண்டில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலை பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர் பணியிடங்கள், சமீபத்தில் நிரப்பப்பட்டன. பணி மூப்பு அடிப்படையில், மூத்த நிலையில் உள்ள, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, தலைமை ஆசிரியர்களாக, பதவி உயர்வு வழங்கப் பட்டது. இதன்படி, 135 பேர் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து, முதுநிலை ஆசிரியர்கள் பணியிடத்தில் காலியாக உள்ள பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, தமிழக பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இந்த பதவி உயர்வு நடவடிக்கை, இந்த வாரம் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, மாவட்ட வாரியாக பணி மூப்பு பட்டியல் தயாரிக்கப்படும். இதையடுத்து, பதவி உயர்வு வழங்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment