Sunday, March 31, 2019

வருமான வரி தாக்கலுக்கு இன்றே கடைசி நாள்

'கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கு, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது; அவகாசம் நீட்டிக்கப்படாது' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாத சம்பளதாரர்கள், அரசு ஊழியர்கள், வியாபாரிகள் என, 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டக்கூடிய அனைவரும், ஆண்டு தோறும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது அவசியம். காப்பீடு, கல்விக் கட்டணம் போன்றவை செலுத்தி, வருமான வரி உச்ச வரம்புக்கு கீழ் வருவாய் இருந்தாலும், மாத சம்பளத்தில், வருமான வரி பிடித்தம் செய்திருந்தாலும், வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது கட்டாயம்.

இந்நிலையில், 2017---- - 18ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், இன்றுடன் முடிகிறது.இது குறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2017 - 18ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல், இன்றுடன் நிறைவடைகிறது. இன்றைக்கு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதோர், வரும் ஆண்டுகளில், கணக்கு தாக்கல் செய்ய முடியாது. இதற்கான அவகாசம் நீட்டிக்கப்படாது. இதே போல, 2016 - 17ம் நிதி ஆண்டுக்கான, திருத்தப்பட்ட வருமான வரி கணக்கு தாக்கல் செய்யவும், இன்றே கடைசி நாள்.

கடந்த ஆண்டு, பிப்ரவரியுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, கணக்கு தாக்கல் செய்தோர் எண்ணிக்கை, 30 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தை கணக்கிடும் போது, இந்த எண்ணிக்கை பல மடங்கு உயரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment