Sunday, April 28, 2019

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும் வரை மாணவர் சேர்க்கையை நீட்டிக்க வேண்டும்: கல்லூரிகளுக்கு உத்தரவு

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் வரை, கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்
சேர்க்கையைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 19-ஆம் தேதி மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. ஆனால், அதற்கு முன்னதாகவே கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி விட்டது. பெரும்பாலான கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள், படிவங்களாகவும், ஆன்லைன் மூலமாகவும் விநியோகிக்கப்பட்டு, இடங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.


இந்நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகள் சிபிஎஸ்இ மாணவர்களுக்கும் விண்ணப்பப் படிவத்தை விநியோகிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும், சிபிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் நாளில் இருந்து 10 நாள்கள் அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்றும் கல்லூரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment