தருமபுரி மாவட்டம், தொப்பூர் அருகே குறிஞ்சிநகர் சுங்கச் சாவடி நிர்வாகம் சார்பில், 5 அரசுப்
பள்ளிகளுக்கு ரூ. 8 லட்சம் மதிப்பில் நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறிஞ்சி நகர் சுங்கச் சாவடி நிர்வாகம் சார்பில் 2018-19-ஆம் ஆண்டிற்கான, பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம் தொப்பூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில், புதிய கழிப்பறை கட்டடம் கட்டி வழங்கப்பட்டது.
இதேபோல, சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டு கழிப்பறை கட்டடத்தை ரூ.2 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டன. மேலும், தருமபுரி சோலைக்கொட்டாய் மருத்துவர் ராமதாஸ் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2 லட்சம் மதிப்பில் ஆழ்துளை மின் விசை பம்பு வசதி, சாமிசெட்டிப்பட்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு ரூ.ஒரு லட்சம் மதிப்பில் மேஜைகள், இருக்கைகளை, மின் விசிறிகள் வழங்கப்பட்டன.
இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பில் சுற்றுச் சுவர் என மொத்தம் 5 பள்ளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் செய்து தரப்பட்டன. சுங்கச் சாவடி நிர்வாகம் சார்பில், தலைமை அலுவலர் சதீஸ்குமார், இயக்க மேலாளர் பெரியதுரை, சாலை பாதுகாப்பு அலுவலர் ஞானசேகரன் ஆகியோர் இப்பணிகளை மேற்கொண்டனர்.

No comments:
Post a Comment