Sunday, April 28, 2019

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு நாளை வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 14ம் தேதி துவங்கி 29ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம்
முழுவதும், 9.97 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில், 29 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்வெழுதினர். இதற்கான விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல் 1 முதல், 16ம் தேதி வரை நடந்தது. இம்முடிவுகள், ஏற்கனவே, அறிவித்தபடி நாளை(29ம் தேதி), இணையதளம் வாயிலாக வெளியாகிறது. தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம். தவிர, பள்ளிகளுக்கு இமெயில் மூலமும், பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலமாகவும் முடிவுகள் அனுப்பப்படும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment