''பள்ளி ஆண்டு விடுமுறையில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது. இதுபற்றி, பள்ளிக்கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும்,'' என, பள்ளி கல்வித் துறை அமைச்சர்,
செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோட்டில், நிருபர்களிடம் அமைச்சர், செங்கோட்டையன் கூறியதாவது:பள்ளி கல்வித்துறையில், தேசிய அளவில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மாணவர்களிடையே, இம்மாற்றங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. குறிப்பாக, பாடத்திட்டத்தில் செய்யப்பட்டு உள்ள தரம் உயர்வுகள், குழந்தைகளுக்கு நல்ல, தரமான கல்வியை கொடுக்கிறது.
ஏற்கனவே, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, இலவச, 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. எட்டாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு, மாணவ - மாணவியருக்கு, மினி லேப் டாப், ஜூன் இறுதிக்குள் வழங்கப்படும்.ஆண்டு தேர்வு முடிந்து, பள்ளி விடுமுறை நாட்களில், வகுப்புகள் நடத்தக்கூடாது என, அரசாணை உள்ளது.
அப்போது தான், மாணவர்களுக்கான அழுத்தம் குறையும். அவர்கள் சுதந்திரமாக, வெயில் காலத்தில் ஓய்வெடுக்க வேண்டும். அப்போதும், வகுப்புகளை வைத்தால், அவர்களுக்கு கடும் மன உளைச்சல் ஏற்படும். இதை, பள்ளி கல்வித் துறை இயக்குனரகம் கண்காணிக்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:
Post a Comment