சி.பி.எஸ்.இ., உட்பட, அங்கீகாரம் பெறாத, அனைத்து தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்க, பள்ளி கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.தமிழக பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர
முருகன், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை:மத்திய, மாநில அரசுகளின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அங்கீகாரம் இன்றி பள்ளிகள் செயல்படுவது விதிமீறல். தேர்வு எழுத முடியாதுஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிக்கும், மாணவர்களின் கல்வி பாதுகாப்பு உறுதி செய்யப்படாது. அவர்களின் சான்றிதழ்கள் தகுதியற்றதாகி விடும்.
அவற்றில் படிக்கும் மாணவ - மாணவியர், அரசின் பொது தேர்வையும் எழுத முடியாது.எனவே, மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும், தங்கள் எல்லையில் செயல்படும், அனைத்து பள்ளிகளின் அங்கீகார சான்றிதழ்களை பெற்று, ஆய்வு செய்ய வேண்டும். அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள், ஐ.பி., பள்ளிகள், ஐ.ஜி.சி.எஸ்.இ., பள்ளிகள் என, அனைத்து பாட வாரிய பள்ளிகளும், தமிழக அரசின் அங்கீகாரத்தை கட்டாயம் பெற வேண்டும்.பெயர் பலகை தேவைஅங்கீகாரம் பெறாத பள்ளிகளின் முன், அங்கீகாரம் பெறாத பள்ளி என்ற பெயர் பலகையை, பெற்றோர், மாணவர்கள், பொதுமக்களுக்கு தெரியும் வகையில், வைக்க வேண்டும். அந்த பள்ளிகள் குறித்த விபரத்தை, பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
அந்த பள்ளிகள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது குறித்த அறிக்கையை, மே, 29ம் தேதிக்குள், பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு, மாவட்ட கல்வி அதிகாரிகள் அனுப்ப வேண்டும். ஏதாவது அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இயங்குவது கண்டுபிடிக்கப்பட்டால், மாவட்டம் சார்ந்த கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment