சிவகங்கை மாவட்டத்தில் 'ஜாக்டோ- ஜியோ' சார்பில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்,
அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், 'மாவட்ட கருவூலத்துறை தன்னிச்சையாக நிறுத்திவிட்டது' என 'ஜாக்டோ- ஜியோ' நிர்வாகிகள் குமுறுகின்றனர்.பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, ஜன.,22 முதல் 29 வரை 'ஜாக்டோ- ஜியோ' கூட்டமைப்பு சார்பில் மறியல், வேலை நிறுத்தம் நடந்தது. இப்போராட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் 20 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். 'நோ ஒர்க்; நோ பே' என்ற விதிப்படி போராட்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு சம்பளம் வழங்க அரசு தடை விதித்தது.சிவகங்கையில் மட்டும்...தற்போது ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு 2019 ஏப்., 1 முதல் சம்பள உயர்வு வழங்கப்படுகிறது.
பெரும்பாலான மாவட்டங்களில் போராட்ட காலத்தை சேர்த்து சம்பள உயர்வு வழங்கியுள்ளதாக ஜாக்டோ- ஜியோ' தெரிவிக்கின்றனர். ஆனால் சிவகங்கை மாவட்ட ஊழியர்களுக்கு போராட்டம் நடந்த 7 நாட்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.இதுகுறித்து மேல் நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஆர்.இளங் கோவன் கூறுகையில், ''இதற்கு முன்பு நடந்த போராட்டங்களில் சம்பளம் மட்டுமே நிறுத்தப்படும். ஆனால் சம்பள உயர்வு வழக்கம் போல் வரும். மற்ற மாவட்டங்களில் சம்பள உயர்வை நிறுத்தாத போது, சிவகங்கை கருவூலக அதிகாரி தன்னிச்சையாக நிறுத்தியது ஏன்?
அரசு செயலர் தென்காசி ஜவஹரிடம் கேட்டபோது, 'அந்தந்த மாவட்ட கருவூலக அதிகாரியின் முடிவு' எனக் கூறி விட்டார். போராட்டத்திற்கு முன் சம்பள பட்டியல் போடப்பட்டதால் 7 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படவில்லை. பின், நாங்களாக முன்வந்து அந்த தொகையை பிடித்தம் செய்து கொள்ள கூறினோம். ஆனால் சம்பள உயர்வு நிறுத்தம் அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார்.
அரசின் கையில் தீர்வு :கல்வி அதிகாரி ஒருவர் கூறுகையில், 'போராட்ட கால சம்பளத்தை பிடித்தது ஆசிரியர், ஊழியர்களுக்கு பாதிப்புதான். சம்பள உயர்வு குறைந்த தொகைதான். போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது மேல்நடவடிக்கை எடுக்க வேண்டாம் என அரசு முடிவு எடுத்தால் சம்பள உயர்வு கிடைத்துவிடும்' என்றார்.விதிப்படியே நடக்கிறது:சிவகங்கை மாவட்ட கருவூலக அலுவலர் ராமலட்சுமி கூறுகையில், ''பொதுவான விடுப்பு, மருத்துவ விடுப்பு தவிர்த்து போராட்ட கால விடுப்பு நாட்களுக்கு சம்பள உயர்வு நிறுத்திவைப்பது நடைமுறையில் இருப்பதுதான். அதன்படி சம்பள உயர்வை 7 நாட்களுக்கு நிறுத்தினோம். அப்படி செய்யாவிடில் விளக்கம் கேட்டு எங்களுக்கு நோட்டீஸ் வருகிறது. இந்த பாதிப்பு 2020 ஜனவரி சம்பள உயர்விலும் ஏற்படும்'' என்றார்

No comments:
Post a Comment