Friday, May 3, 2019

கால்நடை மருத்துவம் படிக்க மே 8 முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின்கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வுக்கு மே 8ம் தேதி முதல்
விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவ இடங்களுக்கு மே 8ம் தேதி முதல் ஜூன் 10ம் தேதி மாலை 5.45 மணி வரை வரை www.tanuvas.ac.in ஆகிய இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்களுக்கான சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு ஜூன் 24ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்படுகிறது. பி.விஎஸ்சி, பி.டெக் பவுல்டரி டெக்னாலஜி, பி.டெக் புட் டெக்னாலஜி, பி.டெக் டெய்ரி டெக்னாலஜி ஆகிய பாடப்பிரிவுகளில் 7 கல்லூரிகளில் 460 இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கான கவுன்சலிங் ஜூலை 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய கால்நடை மருத்துவ கவுன்சில், கவுன்சலிங் மூலம் நிரப்பி வருகிறது. மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் ஒவ்வொரு ஆண்டும் கவுன்சலிங் நடத்தி மாணவர் சேர்க்கை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏப். 19ம் தேதியும், சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் நேற்றும் வெளியானது. இதையடுத்து கால்நடை மருத்துவ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment