Friday, May 3, 2019

நீட்' நுழைவுத் தேர்வு: மதுரையில் மாற்றி அமைக்கப்பட்ட தேர்வு மையங்கள் அறிவிப்பு

மதுரையில் மருத்துவப் படிப்புக்கான "நீட்' நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள்
மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புக்கான தகுதித்தேர்வான "நீட்' தேர்வு நாடு முழுவதும் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. 
இதில் மதுரையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் மாற்றியமைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி பதிவு எண் 410602881 முதல் 410603660 வரையுள்ள மாணவர்களுக்கு ராமேசுவரம் நெடுஞ்சாலை, விரகனூரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. 
பதிவு எண் 410608041 முதல் 410608640 வரையுள்ள மாணவர்கள் அழகர்கோவில் ஏ.வலையப்பட்டியில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயண வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.


பதிவு எண் 410611401 முதல் 410611880 வரையுள்ள மாணவர்கள் ராமேசுவரம் நெடுஞ்சாலை விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. 
பதிவு எண் 410611881 முதல் 410612360 வரையுள்ள மாணவர்கள் எய்ம்ஸ் சாலை, தனபாண்டியன் நகரில் உள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பதிவு எண் 410612841 முதல் 410613320 வரையுள்ள மாணவர்கள் திருநகர் 3-ஆவது பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சி.எஸ்.ராமாச்சாரி மெட்ரிக் பள்ளியிலும், பதிவு எண் 410616201 முதல் 410616560 வரையுள்ள மாணவர்கள் நாகமலை மேற்கு, மேலக்குயில்குடியில் உள்ள எஸ்பிஓஏ பள்ளியிலும் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. 
மேற்குறிப்பிட்டுள்ள பதிவு எண்களை உடைய மாணவ, மாணவியர் w​w​w.​n​t​a​n​e​e​t.​n​i​c.​i​n என்ற இணைய முகவரிக்கு சென்று தங்களது புதிய தகுதித்தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று "நீட்' தேர்வுக்கான தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment