தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தங்களது கோரிக்கைகளை வலியறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ
அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சிசுந்தரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசு முயற்சிக்கிறது. இது ஜாக்டோ ஜியோ அமைப்பின் கடந்த காலப் போராட்டங்களை மனதில் கொண்டு ஆசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சி காட்டும் செயலாகும்.
அதே சமயம், அரசுப் பள்ளிகள் மற்றும் சிறுபான்மையினர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாநிலத்தில் சட்ட, திட்டங்களை அரசு மாற்றி செயல்படுத்துவது வேதனை அளிக்கிறது. அரசின் இந்த நிலைப்பாட்டால் 1,500 ஆசிரியர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அண்மையில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் ஆசிரியர்கள், தபால் வாக்குகளை முறையாக செலுத்த முடியாமல் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். இதனால், பல ஆசிரியர்கள் தபால் வாக்கு செலுத்தவில்லை. அதனால், பதிவாக வேண்டிய 5 லட்சம் தபால் வாக்குகளில், 1 லட்சத்து 96 ஆயிரம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. சில இடங்களில் அதிமுகவினர், போலீஸாருடன் இணைந்து தபால் வாக்குகளை அதிமுகவுக்கு செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.

No comments:
Post a Comment