Thursday, June 13, 2019

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!

பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 தேர்வு முறைகளில் வருகிறது அதிரடி மாற்றங்கள்!



பொறியியல் மற்றும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 வகுப்பிலேயே அதற்கான பாடத்தை மட்டும் படிக்கும் வகையில் தேர்வு முறைகளில் மாற்றம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் நடத்தப்படுகிறது. ஏற்கனவே, மொழிப்பாடங்களுக்கு இரண்டு தாள்கள் இருந்த நிலையில், அது இனி ஒரே தாளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அடுத்த ஆண்டுக்கான பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட இருக்கின்றன. 6 பாடங்கள் 5 ஆக குறைய இருக்கின்றன.

பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் இனி உயிரியல் பாடம் படிக்க வேண்டாம். தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் என்று 5 பாடங்கள் மட்டும் படித்தால் போதும்.

மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ் 1, பிளஸ் 2-வில் கணிதம் படிக்க தேவையில்லை. தமிழ், ஆங்கிலம், உயிரியல், இயற்பியல் மற்றும் வேதியியல் ஆகிய 5 பாடங்கள் படித்தால் போதும். இதற்கான பரிந்துரைகளை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்துள்ளது.

இந்த பணிகளால், தேர்வு அட்டவணை வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment