Friday, June 7, 2019

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதித்தேர்வை ஆன்லைனில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் வளர்ச்சித்திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட அவர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தற்போது நடுநிலைப்பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி மழலையர் வகுப்புகள், அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார்.

உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை கொண்டுவரப்பட்டுள்ளதை சுட்டிகாட்டிய அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், இனி 6 முதல் எட்டு வரையுள்ள பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பம் அளிப்பதை போன்று, வருங்காலத்தில் ஆன்லைன் மூலமாகவே தேர்வு எழுதும் முறை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஊ

No comments:

Post a Comment