Friday, July 26, 2019

4ம் சுற்று கவுன்சிலிங் இன்று உத்தேச பட்டியல்

இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், நான்காம் சுற்று மாணவர்களுக்கு, இன்று, உத்தேச பட்டியல் வெளியிடப்படுகிறது.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், அண்ணா பல்கலையுடன் இணைந்த, இன்ஜினியரிங்
கல்லுாரிகளில், முதலாம் ஆண்டில் சேர, தமிழக அரசின் சார்பில், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங், இரண்டு விதமாக நடத்தப்படுகிறது.விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் தொழிற்கல்வி மாணவர்களுக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டது. பொது பிரிவு மாணவர்களுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக, கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.இந்த, 'ஆன்லைன்' கவுன்சிலிங்கில், மூன்று சுற்றுகளுக்கு மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. நான்காம் சுற்று மாணவர்களுக்கு, நேற்று மாலை, 5:00 மணியுடன் விருப்ப பதிவு முடிந்தது.

இதையடுத்து, உத்தேச இடஒதுக்கீட்டு பட்டியல், இன்று காலையில் வெளியிடப்படுகிறது.பட்டியலில் இடம்பெற்றுள்ள மாணவர்கள், தங்களுக்கான இடங்களை, நாளை மாலை, 5:00 மணிக்குள் ஒப்புதல் அளித்து, உறுதி செய்ய வேண்டும். நாளை மறுநாள், இறுதி ஒதுக்கீட்டு பட்டியல் வெளியாகும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment