Friday, July 26, 2019

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பள்ளிக்கு தாமதமாக வந்த ஆசிரியைக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி நேற்று (25ம்தேதி) காலை 8.30 மணியளவில் பெருமாநாடு அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் காலை வகுப்பினை பார்வையிட்டார். அப்போது அருகே உள்ள தொடக்கப்பள்ளிக்கு ஒரு ஆசிரியை தாமதமாக வந்தார்.இதை பார்த்த முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆசிரியை தாமதமாக வந்ததற்கானவிளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து வயலோகம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டாய்வு மேற்கொண்டார்.

No comments:

Post a Comment