Wednesday, July 10, 2019

தேர்வுத்துறை ஆலோசகராக முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவியை நியமித்து அரசாணையை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை

தேர்வுத்துறை ஆலோசகராக அத்துறையின் முன்னாள் இயக்குநர் வசுந்தராதேவி நியமனம்
செய்யப்பட்டிருக்கிறார். சுமார் ஒரு வாரங்களுக்கு முன்பாகத்தான் தேர்வுத்துறை இயக்குநராக இருந்த வசுந்தராதேவி ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு தற்போது அதே தேர்வுத்துறையின் ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் அதற்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதிலும் பள்ளிக்கல்வித்துறை அந்த அரசாணையில் வெளியிட்டுள்ள முக்கியமான விவகாரம் என்னவென்றால் தேர்வுகளில் இந்த புதிய பாடத்திட்டங்கள் மாற்றப்பட்ட பிறகு, அதிலும் பாடத்திட்ட மாற்றம் மட்டுமில்லாமல் தேர்வு நடைமுறைகளிலும் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை செய்து வருகிறது.

மேலும் இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் கண்காணிப்பதற்கு இதில் ஏற்கனவே அனுபவம் கொண்ட அதிகாரி இருப்பின் அது நல்ல முறையில் இருக்கும் என்பதன் அடிப்படையில் ஓய்வுப்பெற்ற அதிகாரியாக இருந்தவர் தற்போது ஆலோசகராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

மேலும் பள்ளிக்கல்வித்துறையை பொறுத்தவரையில் ஆலோசகராக இருக்கும் அந்த நடைமுறை ஒரு புதிய விவகாரமாக பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து முக்கியமாக இந்த பாடத்திட்ட மாற்றம் மட்டுமல்லாமல் தேர்வு கேள்வித்தாள் அந்த நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே அந்த அனுபவம் இருந்த ஒருவர் தேர்வுத்துறைக்கு தேவைப்படுகிறது என்பதன் அடிப்படையில் இந்த முடிவை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது. மேலும் இதையடுத்து மூன்று ஆண்டுகளுக்கு இவர் தொகுப்பு விகிதத்தின் அடிப்படையில் நியமிக்கப்படுவதாகவும் அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

No comments:

Post a Comment