வேலூர் தேர்தல் காரணமாக, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், காலிப்பணியிடங்கள் இல்லாத
சூழலில், பணிநிரவல் பெயரளவில் நடத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.தமிழகத்தில் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப, ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்களின் பணியிடங்கள் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில், ஆறாம் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களில், 7,000க்கும் மேற்பட்ட பணியிடங்கள் உபரியாக உள்ளன. நடப்பு கல்வியாண்டுக்கான பதவி உயர்வு மற்றும் இடமாறுதல் கவுன்சிலிங் நேற்று தொடங்கியது. இதில், வேலூர் இடைத்தேர்தல் நடப்பதால், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு மாறுதல்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு, தலைமையாசிரியர் பணிக்கான பதவி உயர்வு ஆகியவையும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதனால், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில், புதிய காலிப்பணியிடங்கள் உருவாக வாய்ப்பில்லை. ஏற்கனவே காலியாக உள்ள ஒரு சில இடங்களுக்கு மட்டும், உபரி ஆசிரியர்களை மாறுதல் செய்ய முடியும் என்பதால், பணிநிரவல் கவுன்சிலிங் பெயரளவில் மட்டுமே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உதாரணமாக, 7,000 ஆசிரியர்களில், 500க்கும் குறைவானவர்களே, கட்டாய மாறுதலில் செல்ல வேண்டியிருக்கும். மற்ற ஆசிரியர்கள், அவரவர் பள்ளிகளில் உபரி பணியிடமாகவே பணியில் தொடர வேண்டியிருக்கும். அதே போல், வேலூர் தேர்தல் முடிந்த பின், பதவி உயர்வு நடத்தப்படும் போது, அதனால் காலியாகும் பணியிடங்களுக்கு, இந்தாண்டு முழுவதும் நிரப்ப முடியாத நிலை உருவாகும். இதனால், பணிநிரவலை பதவி உயர்வுக்கு பின் நடத்த வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment