Saturday, July 6, 2019

நாடு முழுவதும் நாளை மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு

மத்திய, ஆசிரியர் தகுதித் தேர்வு நாடு முழுவதும் 97 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை
நடைபெறவுள்ளது. 
மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களாவதற்கு, மாநில அரசின் சார்பில் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
மத்திய அரசின் பள்ளிகள் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்ற, மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் 97 நகரங்களில் நடைபெறவுள்ளன. இதில் சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர்.


இந்த தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டுள்ளன

No comments:

Post a Comment