தொடக்கப்பள்ளி பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி திருப்பூர் வடக்கு வட்டார கல்வி
அலுவலகத்தில் ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.மாநிலம் முழுவதும், 2 ஆயிரத்து 340 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்டுள்ள எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு, தொடக்க பள்ளியில் உள்ள உபரி ஆசியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், காலிப்பணியிட அடிப்படையில், பிற மாவட்டங்களிலிருந்து பணிமாறுதல் பெற்று வந்தவர்கள். பல ஆண்டு அனுபவம் உள்ளவர்கள்.இவர்களுக்கு, வரும் ஜூலை 8ம் தேதி நடக்கும் ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்பதற்கான அனைத்து தகுதியும் உண்டு.இருப்பினும், எல்.கே.ஜி., வகுப்பை காரணம் காட்டி இவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு வருகிறது.
இதனால், கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எதிர்காலத்தில் எல்.கே.ஜி., வகுப்புகளுக்கு உரிய ஆசிரியர்கள் நியமிக்கப்படும் பட்சத்தில் இந்த உபரி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. இதனை கண்டித்து, 75க்கும் மேற்பட்ட தொடக்க கல்வி ஆசிரியர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு செயலாளர் ஜோசப் கூறுகையில், ''கடந்த காலங்களில் ஓராண்டு ஒரு பள்ளியில் பணியாற்றியவர்கள் அடுத்த கலந்தாய்வில் பங்கேற்று விருப்பமான மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற்றனர். தற்போது அரசாணை அதற்கு முரணாக உள்ளது. கலந்தாய்வில் விண்ணப்பங்கள் முற்றிலும் மறுக்கப்படுவதால் ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

No comments:
Post a Comment