Saturday, July 6, 2019

ஜூலை 8ல் மருத்துவ கலந்தாய்வு : இன்று தரவரிசைப்பட்டியல் வெளியீடு*

தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 8ம் தேதி தொடங்க உள்ளது. அதற்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.


நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வை கட்டாயமாக்கி 2016ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.*

தமிழக நீட் தேர்வை உடனடியாக அமல்படுத்த முடியாத சூழல் உள்ளதாக தெரிவித்ததால் ஓராண்டுக்கு மட்டும் தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வழங்கப்பட்டது.*

 2017ம் ஆண்டு பிப் 1ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட  இரு சட்ட மசோதாக்களுக்கு மத்திய அரசு இதுவரை குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற்றுத்தரவில்லை.*

மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வை கட்டாயமாக்குவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.*

இந்த ஆண்டு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் நீங்கலாக, பிற ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் என்று கூறப்படுகிறது.*

கடந்த 3 ஆண்டுகளாக நீட் மதிப்பெண் அடிப்படையில் தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.*

இந்த ஆண்டு நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ம் தேதி நடந்தது.*

 14,10,755 பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் 1,23,078 பேர் தேர்வு எழுதினர். அதில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.*

 தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது.*

அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 இடங்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்னளர்.*

இந்த மாணவர்களுக்கான  தரவரிசைப்பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது.*

ஜூலை 8ம் தேதி சிறப்புப்பிரிவு இடங்களுக்கும், ஜூலை 9ம் தேதி முதல் பொதுப்பிரிவு  இடங்களுக்கும் கலந்தாய்வு தொடங்க உள்ளது.*


No comments:

Post a Comment