Friday, November 1, 2019

புதிய பாடத்திட்ட பளு... அப்பப்பா! சிலபஸ் முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு

மேல்நிலை வகுப்புகளில், கலை, அறிவியல் பாடப்பிரிவில், முக்கிய பாடங்களுக்கு அதிக அழுத்தம்
தரப்பட்டுள்ளதால், உரிய நேரத்தில் சிலபஸ் முடிக்க முடியாமல், ஆசிரியர்கள் விழிபிதுங்கியுள்ளனர். கருத்துகளை உள்வாங்குவதில், மாணவர்கள் சிரமப்படுவதாக புகார் எழுந்துள்ளது.மேல்நிலை வகுப்புகளில், வேதியியல், இயற்பியல், கணிதப்பாடத்திற்கு, இரண்டாம் தொகுதி பாடப்புத்தகங்கள், பள்ளிகளுக்கு சமீபத்தில் விநியோகிக்கப்பட்டன. இப்பாடங்களுக்கு எளிய முறையில் வகுப்பு கையாள்வது குறித்து,முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான, இரு நாள் பணியிடை பயிற்சி வகுப்பு, ராஜவீதி அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்டேன்ஸ் மெட்ரிக் பள்ளி, சித்தாபுதுார், மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் அளிக்கப்படுகின்றன.

முக்கிய பாடங்கள், இரு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு, புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. காலாண்டு தேர்வு வரை, முதல் தொகுதி சிலபஸ் முடிக்கப்பட வேண்டும். அரையாண்டு தேர்வுக்குள், இரண்டாம் தொகுதி சிலபஸ் முடித்து, முழு பாடத்திட்டத்திற்கும், தேர்வு நடத்தப்படும்.புதிய பாடப்புத்தகம், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்டது. இதனால், அதிக பாடங்கள் உள்ளதோடு, திகட்ட திகட்ட கருத்துகள் இடம்பெற்றுள்ளன.

கிட்டத்தட்ட 350 பக்கங்கள் கொண்ட, இரண்டாம் தொகுதி பாடப்புத்தகத்தை முடிக்க, மூன்று மாதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வாரத்தில் ஒதுக்கப்பட்ட 5 கருத்துரு, 2 செய்முறை வகுப்புகளில் சிலபஸ் முடிப்பது, குதிரை கொம்பாக இருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.45 நிமிடங்கள் கொண்ட ஒரு பாடவேளையில், கருத்துகளை அதிகளவு திணிக்கும் போது, மாணவர்களால் உள்வாங்கி கொள்ள முடிவதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. மாணவர்களின் நலன் கருதி, பாடங்களை குறைக்க, கல்வித்துறைக்கு பரிந்துரைத்துள்ளோம். ஆசிரியர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளனர். நீட் வகுப்பும் கையாள்வதால், பலர் ஓய்வின்றி பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த அழுத்தத்தை குறைத்து, கல்வி கற்கும், கற்பிக்கும் சூழலை மாற்ற வேண்டிய பொறுப்பு கல்வித்துறைக்கு உள்ளது.-- சுரேஷ்மாநில தலைவர், தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகம்.கிட்டத்தட்ட 350 பக்கங்கள் கொண்ட, இரண்டாம் தொகுதி பாடப்புத்தகத்தை முடிக்க, மூன்று மாதம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாரத்தில் ஒதுக்கப்பட்ட 5 கருத்துரு, 2 செய்முறை வகுப்புகளில், சிலபஸ் முடிப்பது, குதிரை கொம்பாக இருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

No comments:

Post a Comment