தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால் பணிப்பளு ஏற்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
ஒருங்கிணைந்த நிதியியல் மற்றும் மனிதவள மேலாண்மை (ஐ.எப்., ஹெச்.ஆர்.எம்.எஸ்.,) திட்டம் மூலம் ஆசிரியர், அரசு ஊழியர் சம்பளம், சரண்டர், ஈட்டிய விடுப்பு, சேமநல நிதி முன்பண தொகை, பகுதி தொகை உள்ளிட்ட அனைத்து வகை பில்களும் இத்திட்டத்தின் வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டால் தான் சம்பளம் வழங்கப்படும் என சம்மந்தப்பட்ட கருவூலங்களும் எச்சரித்துள்ளன. ஆனால் விவரங்களை
பதிவேற்றம் செய்வதற்கான சர்வரில் தொடர்ந்து பிரச்னை ஏற்படுவதால் ஒருவரின் பில் விவரம் பதிவேற்றம் செய்ய நான்கு மணிநேரம் வரை ஆகிறது.
இதனால் ரெகுலர் பணிகள் மேற்கொள்ள முடியவில்லை என அலுவலர்கள் புலம்புகின்றனர்.
அவர்கள் கூறியதாவது:மாநில அளவில் சுமார் 12 லட்சம் அரசு ஊழியர்களின் மாத சம்பள பட்டியல் விவரத்தை ஆன்
லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என 2018 முதல் கண்டிப்பான உத்தரவிட்டும் பல
மாவட்டங்களில் முழு அளவில் நடைமுறையில் இல்லை. இதற்கு காரணம் சர்வர் பிரச்னை. தொழில் நுட்ப ஆலோசனை வழங்கவும் ஆட்கள் இல்லை.
கருவூலங்களில் இதுகுறித்து கேட்டால் பதில் கிடைப்பதில்லை. இதனால் அலுவலகங்களில் ரெகுலர் பணியுடன் பில்கள் பதிவேற்றம் பணியும் செய்ய வேண்டியுள்ளதால் மனஉளைச்சல்
ஏற்படுகிறது.
ஓராண்டாக நீடிக்கும் இப்பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
No comments:
Post a Comment