Thursday, December 12, 2019

கற்றல் அடைவு திறனில் ராமநாதபுரம் முதலிடம்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் சார்பில் 7ம் வகுப்பு மாணவர் களுக்காக நடத்தப்பட்ட மாநில அளவிலான கற்றல் அடைவுத் திறன் ஆய்வில் ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

கடந்த ஏப்ரலில் தமிழக அளவில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு அனைத்து பாடங்களில் இருந்து பொதுவான கேள்விகளும், வாழ்க்கையோடு கல்வி சார்ந்த வினாக்களும் கேட்கப்பட்டு மாணவர்களின் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

இதில் மாநிலம் முழுவதும் 5 லட்சத்து 80 ஆயிரத்து 212 மாணவர்கள் பங்கேற்றனர். ராம நாதபுரம் மாவட்டத்தில் 341 பள்ளிகளை சேர்ந்த 10 ஆயிரத்து 248 மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு ஆய்வு செய்யப் பட்டனர். தமிழில் 58.42 சதவீதம், ஆங்கிலம் 50.87, கணிதம் 57.3, அறிவியல் 48.43, சமூக அறிவியல் 39.5 என ஒட்டு மொத்த சராசரி 50.9 சதவீதம் தேர்ச்சி பெற்று ராமநாதபுரம் மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. 50.69 சதவீதத்துடன் அரியலுார் இரண்டாமிடம், 47.8 சதவீதத்துடன் சிவகங்கை மாவட்டம் மூன்றாமிடம் வகிக்கின்றன.

No comments:

Post a Comment